• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் சீசன் என்பதால் நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக ஸ்டாலின் ஆதரவு – பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

February 14, 2019 தண்டோரா குழு

வளம் இருப்பதால் தமிழகத்திற்கு வரும் ஆஸ்திரேலிய பறவைகள் போல் தேர்தல் சீசன் என்பதால் நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக ஸ்டாலின் ஆதரவு அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

நாராயணசாமியின் போராட்டம் தேர்தல் வருவதற்கான அறிகுறி, தேர்தல் நேரத்தில் இதுபோல் விஷயங்கள் நடக்கும். தமிழ்நாடு முக்கியமான மையமாக இருப்பதாக பாஜக நினைக்கிறது. மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகை இந்த பகுதியில் இருக்ககூடிய நண்பர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்றார்.

மேலும், தம்பிதுரை தனது நெருங்கிய சகோதரர் என்றும், அவருடன் தினமும் பேசி வருவதாக தெரிவித்தார். பாஜகவிற்கு கூட்டணி சம்மந்தமாக எந்த பிரச்னையும், யாருடனும் கிடையாது. பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சொன்னால் சரியாக இருக்கும் என கூட்டணி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என முரளீதர ராவ் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் படிக்க