• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் கூட்டணி குறித்து எங்களின் கட்சி மாநாடு முடிந்த பிறகு முடிவு – மருத்துவர் கிருஷ்ணசாமி

February 26, 2021 தண்டோரா குழு

தேர்தல் கூட்டணி குறித்து எங்களின் கட்சி மாநாடு முடிந்த பிறகு முடிவு செய்யப்படும். கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று கோவையில் பா ஜ க வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி பட்டியல்இன பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளை சேர்ந்த மக்கள் தேவேந்திர குளவேலாளராக அங்கிகாரம் வழங்கியதாக தெரிவித்தார்.அதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, எங்களின் கோரிக்கை என்பது பெயர்மாற்றம் என்பது அல்ல பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறுவது என்பதுதான் என்று கூறினார்.

மேலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பட்டியல் வகுப்புல் உள்ள 6 பிரிவை உள்ளடக்கி தேவேந்திர குளவேலாளராக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களையும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாகவும்.தற்பொழுது மாநில அரசு IAS அந்தஸ்த்திலான உயர் மட்ட அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து தேவேந்திர குளவேலாளராக அங்கிகரிக்க மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதே நேரத்தில்
பெயர் மாற்றம் மட்டும் பயன்தராது, மாற்றாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும். தேவேந்திரகுல வேளாளர் என்ற அங்கீகாரமும் வேண்டும் என்பதுதான் எங்களின் தொடர் கோரிக்கை.

மேலும் எஸ் சி தாழ்த்தப்பட்டவர் என்ற வடு நீங்க வேண்டும். அது நெஞ்சில் பாய்ந்த முள் போன்றது எஸ் சி என்ற பெயர் இதில் வாரியர் என்ற பிரிவினர் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பிவில் தங்கள் உட்படுத்த தொடர்ந்து எதிர்த்து வருவதாலும் அவர்கள் தங்களை மீனவர்ளாகவே தங்களை அடையாள படுத்தப்படுத்தவே விரும்புகிறார்கள்.
எஸ் சி மக்களின் அதிகாரம், உரிமைகள் பறிபோகாதா என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அந்த மக்களுக்கு அடையாளத்தை மாற்றினாலே அவர்கள் சுதந்திரமாக தங்களுக்கு தேவையானதையும், பொருளாதார வளர்ச்சியையும் எட்டிவிடுவார்கள்.

சென்னை போன்ற பெரு நகரங்களில், எஸ் சி பிரிவு மக்களுக்கு வாடகைக்கு வீடுகள் தர மறுக்கிறார்கள்.பெட்ரோல் டீசல் விலையேற்றம். மானியம் வழங்குவதாக கூறி விறகு அடுப்பு பயன்படுத்தியவர்களை கேஸ் பயடுத்த வைத்தார்கள். 600 ரூபாய்க்கு கேஸ் விலை இருந்த போது 150 ரூபாய் மானியமாக வழங்கினார்கள் தற்பொழுது 1000 ரூபாயாக உள்ளது ஆனால் 36 ரூபாய் மட்டுமே மானியமாக கொடுக்கப்படுகிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து விலையை குறைக்கவேண்டும்.

தேர்தல் கூட்டணி குறித்து எங்களின் கட்சி மாநாடு முடிந்த பிறகு முடிவு செய்யப்படும் தேர்தல் பணிகளானது எல்லா கட்சிகளைபோல நாங்களும் மார்ச் மாதம் துவங்க உள்ளோம்.இந்துய கம்யூனிஸ் கட்சியின் மூத்ததலைவர், எழுத்தாளரும், பேச்சாளரும் மரணமடைந்தார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது.கடந்த 30 ஆண்டுகாளமாக அவருடன் பயணித்துள்ளேன் ஜெனிவா மாநாடு நேரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரின் மறைவிற்கு புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்வதாக மருத்துவர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்க