• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து ஸ்டாலின், ஈபிஎஸ் கருத்து என்ன?

May 20, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நடந்தது. தேர்தல் முடிவுகள் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் யார் வெல்லப்போகிறார்கள் என எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது.இதற்கிடையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில், பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகவே அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி குறைவான இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கருத்து கணிப்பு குறித்து முக ஸ்டாலின்,

திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை திமுக பொருட்படுத்துவது இல்லை. மக்கள் அளித்துள்ள தீர்ப்பு என்ன என்பது இன்னும் 3 நாட்களில் தெரிய வந்துவிடும். அதுவரை காத்திருப்போம் என கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி கூறும்போது,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பாகும். அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது. 2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. எனவே, 23ம் தேதி வாக்கு எண்ணப்பட்ட உடன் உண்மை தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க