September 28, 2020
தண்டோரா குழு
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேமுக பொதுச்செயலாளர் விஜய்காந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.லேசான அறிகுறி இருந்ததால் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.