• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

March 4, 2019 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.அதிமுக – பாஜக- பாமக, புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் திமுக,காங்கிரஸ்,விசிக, சிபிஐ, ஐஜேகே இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது.இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு ஓ.பி.எஸ் சென்றுள்ளார். ஓ.பி.எஸ். உடன் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயகாந்த் இல்லத்துக்கு வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க