• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு

February 21, 2019 தண்டோரா குழு

பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று முன்தினம் அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இதற்கிடையில் , தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. அண்மையில் தமிழகம் வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, அவர் விஜயகாந்தை நலம் விசாரிப்பதற்காகவே வந்ததாக அவர் கூறினார். எனினும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார். நலம் விசாரிப்பதற்கு தான் விஜயகாந்தை சந்தித்ததாக அவர் கூறினார். ஆனால், விஜயகாந்த் – திருநாவுக்கரசர் இடையேயான சந்திப்பு அரசியல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க