• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராகிறாரா ?

May 30, 2019 தண்டோரா குழு

17வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதியில் தான் வெற்றி கிடைத்தது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் யாருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று கடும் போட்டி நிலவியது.

மேலும்,அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு உடனடியாக வரும்படி டெல்லியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த அழைப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் அழைப்பு என்பதலும், இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில் வந்துள்ள அழைப்பு என்பதாலும் மிகமுக்கியமாக கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இதனால் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் இன்று மாலை அதிகாரபூர்வ அமைச்சரவை பட்டியல் வெளியானவுடன் என்ன நிலை என்று தெரிந்துவிடும்.

இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சரவையில் இடம் பெரும் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க