• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் ஆணையத்தின் கடிதங்களுக்கு காவல்துறை பதில் அளிப்பது இல்லை – ரேகா ஷர்மா

May 17, 2017 தண்டோரா குழு

தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லை என ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருதினங்களாக தேசிய மகளிர் ஆணையம் சார்பாக “மகிளா ஜன சன்வை” பெண்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.இதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா கலந்துக்கொண்டு காவல்துறை அதிகாரிகளிடம் மகளிர் நலன் மற்றும் வழக்குகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காவல்துறையினரே காரணம்.பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்காமல் இருக்கும் காவல்துறையினர் மீது தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லைஎனவும் ரேகா ஷர்மா தெரிவித்தார்.

மேலும், இந்திய அளவில் கெளரவ கொலைகள் தொடர்பான புகார்கள் ஹரியானா மாநிலத்தில் இருந்து அதிகளவு வருவதாகவும் வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்மாநிலங்களில் குறைந்த அளவே பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான புகார்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க