• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய பாதுகாப்பு நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கிய வங்கி ஊழியர்

May 8, 2017 தண்டோரா குழு

தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியில் வசிக்கும் ஜனார்த்தன் பாத்(84) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்.இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்பு படைவீர்கள் தீவிரவாதத்தை முறியடிக்க போராடி வருகின்றனர். சமீபத்தில், இந்த வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் செய்திதாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த ஜனார்த்தன், இறந்த வீரர்களுக்கு ஏதாவது ஒரு முறையில் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.

இதையடுத்து சிறிது சிறிதாக தான் சேமித்த பணம் மற்றும் பல்வேறு முதலீடுகளில் சேமித்த பணத்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்தது. அந்த தொகையை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும் அவர் வங்கியின் தொழிற்சங்க தலைவராக இருந்தபோது, தன்னுடைய சக ஊழியர்கள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து வெளி வர அவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அதோடு, உதவி தேவைப்பட்ட மக்களுக்காக அவரும் அவருடைய நண்பர்களும் 54 லட்சம் கொடுத்து உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க