• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் – சி.பி.ராதாகிருஷ்ணன்

December 27, 2020 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் என கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் அருகேயுள்ள அசோக் நகர் பகுதியில் கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்களை திசை திருப்ப மிக கடுமையாக முயற்சியை மேற்கொண்டுள்ளனர் எனவும், தமிழகத்திற்கு ஒரு மத்தியமைச்சர் கூட இல்லையென்றாலும், 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தந்துள்ளது எனவும் அவர் கூறினார்.தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் எனவும், கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கூட்டணியில் அதிமுக தலைமைய என்பதை முடிவு செய்தது பாஜக தேசிய தலைமை தான் எனவும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டியது அதிமுக தான் எனவும் அவர் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் அதிமுகவும், பாஜகவும் வலுவாக உள்ளது எனவும், பாஜக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது இயற்கை எனவும் கூறிர அவர், அதிமுகவும், பாஜகவும் இணைந்து வேலை செய்யும் வகையில் உரிய இடங்களை கூட்டணி தலைமை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க