• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டவர்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கல்

October 25, 2019 தண்டோரா குழு

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டவர்களுக்கு நற்பணி அறக்கட்டளையினர் பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

படிக்கும் வயதில் உள்ள குழந்தைகலுக்கு கல்வி மறுக்கப்பட்டு பணிக்கு அனுப்புவதை தடுக்கும் நோக்கில் 1995ம் ஆண்டு தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் திட்டம் செயல்படுத்தபட்டது. இவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கு (என்.சி.எல்.பி) மூலம் கல்வி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கப்பட்ட பின்னர், முறைசார்ந்த பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தைகளின் உயர் கல்விக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் வழங்கபட்டு வருகின்றன.

இவ்வாறு, கடந்த ஆண்டு மீட்கபட்ட குழந்தை தொழிலாளர்கள் 50 பேருக்கு உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாரத மாதா அறக்கட்டளை உறுப்பினர்கள் மதிய உணவு வழங்கி, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிட முப்பதாயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். அதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்திருந்த மீட்க்கப்பட்ட குழந்தைகலுக்கு திட்ட இயக்குனர் விஜயகுமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கினர். வெள்ளலூர், கொண்டி நகர் மற்றும் அறிவொளி நகர் பகுதியில் இருந்து வந்திருந்த, மீட்கபட்ட குழந்தைகள் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஹரியானா,பீகார் மற்றும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மீட்கபட்டவர்கள் தான் இந்தக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க