• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டி – கோவை சேர்ந்த பள்ளி மாணவன் முதல் இடம்

September 22, 2022 தண்டோரா குழு

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டியில் கோவை சேர்ந்த பள்ளி மாணவன் முதல் இடம் பிடித்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மத்திய பிரதேசம்,போபால் பகுதியில் கடந்த வாரம் தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டி நடைபெற்றது. தமிழகம்,கேரளா, ஹரியானா, குஜராத்,மஹாராஷ்டிரா,ஆந்திரா உள்ளிட்ட 29 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற இதில் 18வயதுக்கு உட்பட்ட பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் டெக்கலத்தானில் 10போட்டிகள் உள்ளடக்கிய ஈட்டி எறிதல், ஓட்ட பந்தயம், தடகளம், குண்டு எறிதல்,போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை நேஷனல் மாடல் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் அரவிந்த் என்ற மாணவன் முதல் இடத்தை பிடித்து சான்றிதழ்கள்,தங்க பதக்கங்களை வென்றார்.

இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாணவனுக்கு 1லட்சத்திற்க்கான காசோலை மற்றும் பள்ளியில் கட்டணமில்லாமல் பயில அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் படிக்க