August 18, 2020
தண்டோரா குழு
தேசிகல்விக் கொள்கைக்கு எதிராக
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடையில் இன்று அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில பொதுச்செயலாளர் க.அஷ்ரப் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசானது கல்வியில் காவியை புகுத்தும் வேலையை கைவிடவேண்டும், ஒருபோதும் தேசிகல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியாக மாவட்ட பொருளாளர் ஜமீல் ஹாரிஸ் நிகழ்த்தினார்.