• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலங்கானாவில் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி!

December 11, 2018 தண்டோரா குழு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில், சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 85 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில், மீண்டும் சந்திர சேகர ராவ் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர் ராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, நாளை முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க