• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

January 3, 2022 தண்டோரா குழு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ்ஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதுகு வலி காரணமாக இப்போட்டியில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். இதனால் இப்போட்டிக்கு ராகுல் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.

மேலும் படிக்க