• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் ஆப்ரிக்காவில் மனித உருவம் கொண்ட வினோத ஆட்டுக்குட்டி

June 27, 2017 தண்டோரா குழு

தென் ஆப்ரிக்காவில், ஆடு ஒன்று பாதி மனித உருவத்துடனும், பாதி மிருகத்துடனும் குட்டி போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் கிழக்கு மாகாணமான லேடி பிரெர் என்னும் இடத்தில் 4000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பாதி பேர் விவசாயம் செய்பவர்கள். அந்த இடத்தில் ஆடு ஒன்று பாதி மனித உருவத்துடனும், பாதி மிருக உருவத்துடனும் குட்டி போட்டிருப்பதை கண்ட மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால் அது சிறிது நேரத்திற்குள் அது இறந்துவிட்டது.

இந்த வினோத பிறப்பை குறித்து அறிந்த Eastern Cape Department of Rural Development துறை நிபுணர்கள் இந்த வினோத பிறப்பு எப்படி ஏற்பட்டது என்று தெரிந்துக்கொள்ள பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து கால்நடை சேவை தலைமை இயக்குனர் கூறுகையில்,

“வினோதமான முறையில் பிறந்த ஆட்டுக்குட்டி பார்க்கத்தான் மனிதனை போன்று காட்சி அளித்துள்ளது. அந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் பொய்யானது அல்ல. இந்த வாரம் லேடி பிரெரில் கடுமையாக சிதைந்த ஆட்டுக்குட்டி பிறந்தது. அது ஒரு மனித வடிவத்தை ஒத்திருந்தது. இந்த குட்டியின் பிறப்பிற்கு முன், இதன் தாயிக்கு Rift Valley Fever தாக்கியுள்ளது. அதன் காரணமாக தான், ஆட்டுக்குட்டி வினோத முறையில் பிறந்துள்ளது” என்று கூறினார்.

மேலும் படிக்க