• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னை விவசாயத்தை காக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

October 18, 2021 தண்டோரா குழு

தென்னை விவசாயத்தை காக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னையை பாதிக்கும் வாடல் நோய், கூன் வண்டு தாக்குதல், ஈயிரியோ பைட், வெள்ளை ஈ தாக்குதல், ஒரு நடனம் ஆகிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒரு ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம் காட்டி தென்னையை பயன்படுத்தி செய்யக்கூடிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, மட்டை கம்பெனி, கயிறு தொழிற்சாலை, நீரா பானம், இளநீர், ஆகிய தொழில் நிறுவனங்கள் முடக்குவதால் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுவதாகவும் இதனை தவிர்க்க வேண்டும் எனவும், தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாத்திட தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க