• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னையில் வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

November 18, 2019

வாயில் பச்சை துணி கட்டி , தென்னையில் வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் தென்னை மரங்களில் வெள்ளி பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் தென்னை விவசாயமே முற்றிலும் அழிந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர், வாயில் பச்சை துணி கட்டி, வெள்ளை பூச்சிகளால் பாதித்த தென்னை மட்டைகளை கொண்டு வந்து , மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாரளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது,

கோவை மாவடத்தில் வெள்ளை பூச்சிகளால் தென்னை விவசாயமே பல கோடி ரூபாய் மதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தரிசு நில மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடன் பெற்றவர்கள் வெள்ளை பூச்சி தாக்குதலால் மிகுந்த நஷ்டத்தித்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசின் பூச்சியியல் துறை கொடுத்த மருந்தும், அவர்கள் மஞ்சள் கலர் அட்டையை மரத்தில் கட்டச்சொன்னதும் பலனளிக்காமல், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமானதுதான் மிச்சம் என்றார். விஞ்ஞான ரீதியிலான கண்டுபிடிப்பை மேற்கொண்டு வெள்ளை பூச்சிகளை அழிக்கும் மருந்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தினர். வெளிநாட்டிலிருந்து இந்த வெள்ளைப்பூச்சிகள் வந்ததாக அதிகாரிகள் கூறுவதால், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்ததாக தெரிவித்தார்.

மேலும் படிக்க