• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மை பணியாளர்களுக்கு நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக இலவச அரிசி மூட்டைகள் வழங்கல்

June 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 34,35,36 ஆம் வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக இலவச அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.

கோவையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய் தொற்று பாதித்துள்ள பகுதிகளில் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் முன் கள பணியாளர்களை நேரு நகர் அரிமா சங்கத்தினர் கவுரபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 34,35,36 ஆம் வார்டுகளில் பணியாற்றும் சுமார் 250 தூய்மை பணியாளர்களுக்கு ஐந்து கிலோ அரிசி மூட்டைகளை நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. நேரு நகர் அரிமா சங்க செயலாளர் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,முன்னால் மண்டல தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார்.

முன்னாள் தலைவர் பாஸ்கரன்,இந்நாள் தலைவர் நேரு நகர் நந்து,பொருளாளர் ஹரீஷ் ,குபேந்திரன்,வினோத்,வெங்கடேஷ் ஆகியோர் முன்னாள் வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கோவை மத்திய போக்குவரத்து துறை அலுவலர் பாஸ்கரன் கலந்து தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினார். இதில் சுப்ரமணியம்,நேருநகர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க