September 22, 2017 
தண்டோரா குழு
                                2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி “தூய்மை இந்தியா” திட்டத்தை துவங்கி வைத்தார்.
வரும் 2019ம் ஆண்டு காந்தியின் 150வது பிறந்த நாளிற்குள் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற அவரே வாரணாசியில் தூய்மைப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டார். அதைப்போல்  சமுதாயத்தின் பல பிரிவினரும் “தூய்மை இந்தியா” இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்தனர். 
இந்த திட்டம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது  இந்த திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘தூய்மையே கடவுள்’, என்றும் ‘பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன்’ என கூறி உள்ளார்.