November 6, 2017
தண்டோரா குழு
துபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்தாதவர்கள், இவ்வாண்டிற்குள் செலுத்தினால், அவர்களுக்கு 5௦ சதவீதம் தள்ளுப்படி வழங்கப்படும் என்று துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும் துபாயில் நகரில் கடந்த ஆண்டு, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதை செலுத்தாதவர்கள், இந்த ஆண்டிற்குள் செலுத்தினால், அவர்களுக்கு விதிக்கபடிருக்கும் தொகையில், 5௦ சதவீதம் தள்ளுப்படி செய்யப்படும் என்று அந்த நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதம், இவ்வாண்டிற்குள் செலுத்தப்படும் என்றால், அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி உண்டு.அதாவது அபராதத்தை 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அபராத தொகையை யூஏபி வங்கிகளில் செலுத்த வேண்டும் அல்லது ஆன்லைன் கட்டணம் உள்ளிட்ட பல மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி அபராத தொகையை செலுத்தலாம். போக்குவரத்து துறையுடனும், அனைத்து காவல்துறை மற்றும் கார் பதிவு மையங்கள் மற்றும் அனைத்து வணிக மையங்களிலும் கியோஸ்க்களில், அபராத தொகையை செலுத்த முடியும்” என்று துபாய் போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.