June 29, 2020
தண்டோரா குழு
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தோற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.