• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை முதலமைச்சரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு

July 24, 2018 தண்டோரா குழு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்ற தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்க நேற்று டெல்லி சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர். டெல்லி விமானநிலையத்தில் அவர்களை மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம்,

டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது. எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.லோக்சபா தேர்தலுக்கான சூழல் உருவாகவில்லை. அறிவிப்பு வந்தவுடன் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள் எனக் கூறினார்.

இந்நிலையில்,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தம்மை சந்திக்க மைத்ரேயனுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்மை சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க