• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

October 21, 2017 தண்டோரா குழு

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உடல்நிலை குறைபாடு காரணமாக
புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் துணை குடியரசு தலைவராக பதவி வகித்து வருபவர் வெங்கையா
நாயுடு(68). அவருக்கு ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவும்
அதிகமாக இருந்ததாலும், இதயம் சம்பந்தம்பட்ட கோளாறு இருந்த காரணத்தால்,
அவரை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியோ தோராசிக்
மற்றும் நரம்பியல் பிரிவில் வெள்ளிக்கிழமை(அக்டோபர் 20) சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்,

“உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோகிபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. பயப்படும் படியாக ஒன்றும் இல்லை. அவர் மருத்துவமனையில் இருந்து இன்று சனிக்கிழமை(அக்டோபர் 21) டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்” என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க