October 20, 2020
தண்டோரா குழு
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கோவையில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மருத்துவ விடுப்பு சிறப்பு செயல் விடுப்பு ஆகியவை இனிமேல் வழங்கப்படாது என்றவாறு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தினர்.அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐஎம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பவை கண்டித்தும் அவர் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தை உடனடியாக ஆளுநர் அவர்கள் சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் cpim உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்