• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்

September 24, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் துடியலூர் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இக்காட்டு யானைகளை விரட்டி அடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்கதையாகி வரும் காட்டு யானைகள் அச்சுறுத்தலால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க