• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீ விபத்தால் சென்னை சிலக்ஸ்க்கு சேதம் எவ்வளவு?

June 1, 2017 தண்டோரா குழு

சென்னையில் தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸ் கடையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இன்று வரை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

நாள் முழுக்க எரிந்த நிலையில் கட்டடம் இடிந்து விழுந்து பெருமளவு சேதம் ஏற்பட்டது.இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தீ விபத்து குறித்து போலீசார் கூறுகையில்,

தீ விபத்திற்குள்ளான சென்னை சிலக்ஸ் கட்டடத்திற்குள் தோராயமாக 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்திருக்கலாம், மேலும் ரூ.80 கோடி மதிப்பிலான துணிகள், ரூ. 20 கோடி மதிப்புள்ள வைர நகைகள், இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். எனினும் இவற்றிற்கு காப்பீடு செய்துள்ளதாக நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும் இந்த கோர தீ விபத்தால் ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க