• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டிற்க்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு – ராஜ்நாத்சிங்

March 1, 2019 தண்டோரா குழு

தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாததிற்க்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டிற்க்கு இஸ்லாமிய நாடுகள் முழு ஆதரவாக இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற தேசிய புலனாய்வு அமைப்புக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் நமக்கு ஆதரவாக உள்ளன. இதற்கு உதாரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளதைக் கூறலாம். சில நேரத்தில் தீவிரவாதத்துடன் மதத்தை இணைத்து பேச சிலர் முயற்சிப்பதாகவும், இது சரியல்ல என்று தாம் நினைப்பதாகவும் கூறினார்.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்புகளின் தீவிர முயற்சியினால் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யப்படுவது வெகுவாக குறைந்துள்ளது ” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க