• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீவிரவாதிகள் இந்தியா மீது கடல் மார்கமாக தாக்குதல் நடத்த திட்டம் – கடல்படை தளபதி பகீர்!

March 5, 2019 தண்டோரா குழு

மும்பை தாக்குதலை போலவே மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருவதாக கடற்படை தளபதி சுனில் லான்பா பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கங்ககளை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தெறிந்தது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும் குவிந்தன.
இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தோ-பசிபிக் பிராந்திய உயர்மட்ட கருத்தரங்கில் பேசிய இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா ”
உலகின் பல நாடுகளும் தொடர்ந்து தீவிரவாத பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத தாக்குதலை முடிவுக் கொண்டு வர அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

சமீபத்தில் மிக மோசமான தாக்குதலை காஷ்மீரில் நாங்கள் சந்தித்தோம். இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டு வரும் தீவிரவாதிகளின் முயற்சி இது. ஆனால் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் பல்வேறு வழிகள் வழியாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கடல் வழியாக தாக்குதல் நடத்த பெரிய அளவில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க