August 1, 2020
தண்டோரா குழு
தீரன் சின்னமலையின் 215 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாச்சிபாளையம் பகுதியில் புகைபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
தீரன் சின்னமலை 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தூக்கி லிடப்பட்டார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று 215 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை மதுக்கரை நாச்சிபாளையம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், தீரன் சின்னமலை புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் அமமுக மதுக்கரை ஒன்றிய செயலாளர் சண்முகம், நாச்சிபாளையம் நாகராஜ் மாவட்ட செயலாளர் ரோகினி புகழஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சக்திவேல், மாணவரணி வெங்கடேஷ், கீதாஞ்சலி, இளைஞரணி ஜெயக்குமார், மதுக்கரை ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.