• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன் குப்பை கொட்டிய தூய்மைப் பணியாளர்

October 12, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் எல் இ டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவர் கருமத்தம்பட்டி பகுதியைசேர்ந்தவர். இவரிடம், கடந்த 4 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என கூறியுள்ளார். 500 ரூபாய் கேட்டு அவர் தொந்தரவு செய்யவே , இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து,கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு , கொடுக்காத கடை முன்பு, தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக, வியாபரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மையாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க