• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு !

October 14, 2021 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.1-3ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் நவ.4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.1-3ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘பார்வையில் காணும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் 11.10.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சரால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தீபாவளி-2001 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர்-2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் அதிகபட்சமாக முன்தர்வு முழுமையாக முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமாக முன்நகர்வினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் எனவும்.

மேலும் 1.11.2021, 02.11.2021 மற்றும் 03,11,2021 ஆகிய தினங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க