October 20, 2020
தண்டோரா குழு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலிஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிருஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு டவுன்ஹால், ஒப்பணைகாரர் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சாலை ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தொற்று பரவல் காலம் என்பதால் பெண் போலிஸார் ஒலிப்பெருக்கி மூலம் முக்க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் உடமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவித்து வருகின்றனர். மேலும் சாதாரண உடையில் போலிஸார் மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து வருகின்றனர்.