October 9, 2017
தண்டோரா குழு
தீபாவளி பண்டிகையையொட்டி 42 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.குடியரசு தினம்,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.இந்நிலையில் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.