• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் – முக ஸ்டாலின்

March 8, 2019 தண்டோரா குழு

தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் – முக ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தி.மு.க. கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆர். எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தந்துள்ளன. அவர்களுக்கு நன்றி. தே.மு.தி.க. விவகாரம் பற்றி துரைமுருகன் விளக்கம் தந்துவிட்டதால், நான் அதுபற்றி பேச விரும்பவில்லை. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத ஆட்சி தான் மத்தியில் செயல்படுகிறது. ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க