• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் – வருமான வரி துறை தகவல்

March 30, 2019 தண்டோரா குழு

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரி துறையிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இருந்தனர். சுமார் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து துரைமுருகனின் மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியிளும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று நடைபெற்ற சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது கல்லூரி, பண்ணை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க