• Download mobile app
11 Apr 2026, SaturdayEdition - 3713
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி ஆரம்பிப்பார்” – கோவையில் அண்ணாமலை அதிரடி பேச்சு !

April 11, 2026 தண்டோரா குழு

தேசிய ஜனநாயக கூட்டணி கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்ணப்ப நகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் வானதி சீனிவாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பங்கேற்கவில்லை எனவே வானதி சீனிவாசனின் மகன் ஆகாஷ் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்வில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அண்ணாமலை,தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தேர்தலுக்காக மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் அலை தமிழகம் முழுவதும் உள்ளது அனைவரும் தி.மு.க வேண்டாம் என்று தான் நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

பெண்கள் நீங்களும் தி.மு.க விற்கு வாக்களிக்க மாட்டீர்கள் என்று தெரியும் என்றும் முதலமைச்சர் அடிக்கடி கூறும் தி.மு.க வின் இரும்பு கரம் தற்பொழுது துருபிடித்து உள்ளது என்றார்.கோவை மாவட்டம், அ.தி.மு.க வின் கோட்டை என்று குறிப்பிட்ட அவர் இந்த தொகுதியில் அனைவரும் சேர்ந்து தாமரைக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் செந்தில் பாலாஜி என்ற எலி அங்கும்,இங்கும் சென்று தற்பொழுது கோவையில் வந்து மாட்டிக் கொண்டு விட்டது என்றும் விமர்சித்தார்.தி.மு.க வின் தோல்வி கோவையில் இருந்து துவங்கி சேப்பாக்கம் வரை செல்லும் என்றும் கூறினார்.

அடிமைக் கட்சி என்பது தி.மு.க தான் என்று குறிப்பிட்ட அவர் 1977 க்கு பிறகு அதிக முறை ஆட்சியில் இருந்தது அதிமுக தான் என்றும் தி.மு.க வின் ஊழல் பட்டியல் காங்கிரஸிடம் உள்ளது என்றும் தெரிவித்தார். தி.மு.க வில் ஒரே குடும்பத்தினர் தான் தொடர்ந்து ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை

தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது கஞ்சா பழக்கவழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள் என்றும் அடிப்படை பிரச்சனைகளில் தி.மு.க கோட்டை விட்டு உள்ளது என்றார்.

DMK File தொடர்பான கேள்விக்கு நான் DVAC யில் புகார் அளித்து உள்ளேன், அவர்கள் பா.ஜ.க அலுவலகத்திற்கு வந்து விசாரணை செய்து விட்டு சென்று உள்ளார்கள், அமைச்சர் காந்தி வேட்டி சேலை ஊழல் செய்தார்,
160 கோடி ஊழலை ஆதாரத்துடன் வழங்கி உள்ளேன், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி கமலாலயத்திற்கு வந்து என்னிடம் விசாரணை நடத்திச் சென்றார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். ஆட்சி மாறட்டும் புழல் சிறையில் தனி பிளாக் கட்டி தான் இவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஜனநாயகன் திரைப்படம் லீக்கானது எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது என்றும், அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் கூறிய அவர்,
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் பொழுது ஒரு ரசிகனாக நான் சென்று பார்ப்பேன் , ஆனால் இந்த விவகாரத்தில் எல்.முருகனைத் தொடர்பு படுத்தி பேசுவது வன்மையின் உச்சம் என்றார்.

ஜனநாயகன் திரைப்படத்தில் பல பேரின் உழைப்பு ரத்தம் அதில் உள்ளது, எந்த விஷக் கிருமிகள் அதனை செய்து இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இது குறித்து சி.பி.ஐ இடம் விசாரணை நடத்த வேண்டும் என்றாலும் கூட நாங்களும் அதனை ஆதரிக்கின்றோம் என்றார்.

ராம்தாஸ் அத்வாலே, விஜய் ஜெயித்தால் அவருடைய கட்சியின் வெற்றி அ.தி.மு.க வுடன் இணைந்து விடும் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு

அது அவருடைய சொந்த கருத்து, தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளையும் கடந்து வெல்லப் போகிறோம் தி.மு.க வேண்டாம் தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டுமென்று மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்றார்.

அறிவாலயத்தில் அடி செங்கல் வரை உருவுவேன் என்று கூறிய அண்ணாமலையின் செங்கல் உருவி உள்ளது என்று, நேற்று செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துக்கு, நாங்கள் தற்பொழுது கூட அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி கொண்டு தான் இருக்கிறோம். 2026 தேர்தலில் தி.மு.க தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பித்து விடுவார், ஸ்டாலின் ஒரு பக்கம் வந்து விடுவார்.

தி.மு க யாரிடம் செல்லும் என்றே தெரியாது, செந்தில் பாலாஜி Opportunity யை பார்ப்பார், கனிமொழியிடம் செல்வதா ? ஸ்டாலினிடம் செல்வதா ? என்று பார்ப்பார்.

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலும் வெளியில் வந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கும் பொழுது தி.மு.க இனி ஜென்மத்திற்கு ஆட்சிக்கு வராது என்றார்.

செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து ஒரு விமர்சனத்தை முன் வைத்தால் நானும் தரம் தாழ்ந்து பேச விரும்பவில்லை என்றும் செந்தில் பாலாஜி டாஸ்மாக்கில் பத்து ரூபாய் சம்பாதித்து அதனை வாரி இறைத்து கொண்டு இருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் சரித்திரம் காணாத ஒரு தோல்வியை செந்தில் பாலாஜி பார்க்கப் போகிறார் என்றார்.

மேலும் படிக்க