திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்
சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து, சங்க அலுவலகத்திற்கு சென்ற விஷால் பூட்டை உடைக்க முயன்றார். அப்போது போலீசாருக்கு விஷால் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதற்கிடையில், நடிகர் விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் விஷால் மீது சட்ட விரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் மாலை விஷால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்ததற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை