• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரைப்படமாகிறது சசிகலா வாழ்க்கை வரலாறு – படமாக்கும் சர்ச்சை இயக்குனர் !

April 1, 2019 தண்டோரா குழு

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஆந்திராவில் என்.டி.ஆர் வாழ்க்கையை மையமாக வைத்து அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து, தயாரித்த படங்களான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’ மற்றும் ‘என்.டி.ஆர் மகாநாயகுடு’ 2 படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதனை தொடர்ந்து ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்.

பாலகிருஷ்ணா தயாரித்த படத்தில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நல்லவிதமாக காட்டி இருப்பதாகவும், ஆனால் தான் உண்மைத் தகவல்களை வைத்து இயக்கி வருவதாகவும் ராம்கோபால் வர்மா தரப்பில் தகவல் வெளியானது. இது ஆந்திர அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவரும் நிலையில் ராம்கோபால் வர்மா அடுத்ததாக சசிகலா வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார். அறிவிப்பதில் சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் இந்த திடீர் அறிவிப்பு சமூக வலைதளத்திலும் பெரும்சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 2017-ம் ஆண்டே ‘சசிகலா’ பயோபிக் தொடர்பான அறிவிப்பை ராம்கோபால் வர்மா வெளியிட்டார். ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்ததால், ‘சசிகலா’ பயோபிக் குறித்து எந்த வொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இது குறித்து ராம்கோபால் வர்மா கூறுகையில்,

‘சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்’ எனக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க