• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் இடைத்தேர்தல் : திமுகவுக்கு மதிமுக, சிபிஎம் ஆதரவு

January 1, 2019 தண்டோரா குழு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு சிபிஎம், மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான 2016 சட்டபேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என வைகோ தெரிவித்து உள்ளார். மேலும்,திமுக வெற்ற பெறற மதிமுக பாடுபடும்.திமுக வேட்பாளர் வெற்றி பெற ஊர் ஊராக பிரச்சாரம் மேற்கொள்வேன். 2004-ல் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல் 2019 தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு என முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேசம் காக்க, தமிழகம் மீட்கப்பட திமுகவுக்கு பேராதரவு அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுகவுக்கு ஆதரவு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க