• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் இடைதேர்தல்: கஜா நிவாரணப் பணிகளுக்கு தடையில்லை – தலைமை தேர்தல் அதிகாரி

December 31, 2018 தண்டோரா குழு

திருவாரூர் இடைத்தேர்தலால் கஜா புயல் நிவாணரப் பணிகளுக்கு எந்த விதமான தடையும் இல்லை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான 2016 சட்டபேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருவாரூர் தொகுதிக்கு ஜன.,28ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜன.,3ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஜன., 10. மனுக்கள் மீதான பரிசீலனை ஜன.,11ம் தேதி துவங்குகிறது. மனுக்களை திருப்பி பெற கடைசி நாள் ஜன., 14. ஓட்டு எண்ணிக்கை ஜன.,31ம் தேதி நடைபெறும். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்புபை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில்.தமிழகத்தில் கஜா புயல் நிவாரணம் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் நிவாரண உதவியில் பாதிப்போ, தடையோ ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ விளக்கமளித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்; ஏற்கனவே அறிவித்த கஜா நிவாரணப் பணிகளுக்கு தடையில்லை வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத்தை வரவு வைக்கும் திட்டம் தொடரலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ கூறியுள்ளார்.

மேலும் படிக்க