• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் பாதையை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்

November 2, 2017 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பூங்கோதை(50). அப்பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு வீடுகட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி இருந்தனர்.

இது தொடர்பாக பூங்கோதை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க மாவட்ட கலெக்டருக்கு சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்கப் போவதாக லோகசந்திரன், நடராஜன், தியாகி உள்ளிட்ட 4 பேருக்கு ஏற்கனவே முன் அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் இன்று திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் முரளி, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, வீடுகளை இடித்து தள்ளினார்கள்.

அப்போது லோக சந்திரனின் சகோதரி லீலாவதி தனது உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வேப்பம்பட்டு-புதுச்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க