• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம்

May 29, 2017 தண்டோரா குழு

மெரினாவில் தடையை மீறி ஈழதமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக திருமுருகன் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றது. அதே ஆண்டு மே 17ம் தேதி முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. இதன் நினைவாக ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இதற்கிடையில்,ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடந்த போராட்டத்தின் போது லட்சக்கணக்கான பேர் திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதையடுத்து, மெரினாவில் கூட்டம் நடத்த சென்னை காவல்துறை தடை விதித்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியை அனுசரிக்க மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் கெளதமன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தை சேர்ந்தஇளைஞர்களும் பேரணியாக சென்றனர். இப்பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் நிர்வாகிகள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாககூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருமுருகன் காந்தி மீது 17 வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பல வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க