• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு

November 18, 2019

இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் சக்திசேனா அமைப்பினர் சார்பாக புகார் மனு அளித்தனர்.

கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் இந்து மக்கள் இயக்கத்தின் சக்தி சேனா சார்பாக மனு அளிக்கப்பட்டது.மனுவில் சமீபத்தில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த மகளிரணி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார், இந்த கருத்து இந்து மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது இந்த செயல் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சேனாவின் தெய்வீக பேரவை தலைவர் வினோத்கண்ணன் பேசுகையில் திருமாவளவன் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் இது போன்று தொடர்ந்து பேசி வருவதாகவும் எனவே ,அவரது கட்சியை தடை செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க