• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது

January 31, 2018 தண்டோரா குழு
திருமணம் செய்து கொள்வதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சேலத்தை சேர்ந்த பால முருகன் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 41 இலட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய சென்ற போது, காவல் துறையினரை தாக்கிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதைதொடர்ந்து கடந்த 2016 ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மென்பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரிடம் 43 இலட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், இன்று ஸ்ருதி, சித்ரா, பிரச்சன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
மேலும் ஒரு வழக்கில் கைது செய்த காவல் துறையினர், கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் வருகின்ற பிப்ரவரி 14 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு நீதிபதி நம்பிராஜன் ஒத்திவைத்தார். இதைதொடர்ந்து ஸ்ருதி உள்ளிட்ட மூவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க