June 19, 2020
தண்டோரா குழு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் யங் இந்தியன்ஸ், திருப்பூர் மாநகராட்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்துகொள்ளும் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” எனப்படும் செயலியின் அறிமுக விழா திருப்பூர் கலெக்டர் வளாகத்தில் நடைபெற்றது .
தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இச்செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன்,ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை உதவிப்பேராசிரியை ரதி ஆகியோர் உடனிருந்தனர். இச்செயலியை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கோகுல் மற்றும் அஸ்வின் ஆகியோர் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையத்தில் உதவிப்பேராசிரியை ரதி மேல்பார்வையின் கீழ் வடிவமைத்தனர்.
மாணவர்கள் இச்செயலியின் பயன்பாட்டை பற்றி கூறுகையில்,
இச்செயலியின் நோக்கம் கொரோனா தொற்று மற்றும்பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். இவர்களை சார்ந்தவர்கள் எங்கெங்கு பயணிக்கிறார்கள் என்பதை புவி இருப்பிடம் மூலம் எடுத்துரைப்பதே ஆகும். புதிதாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பதிவுப்பக்கம்,கண்காணிப்பு பிரிவு பன்மொழி உபயோகிப்போரின் இடைமுகம் ஆகிய செயல்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.தொற்று உள்ளவர்களுக்கு,அவசர உதவி எண், அன்றாட தேவைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் மளிகை பொருட்களை மிக விரைவாக கிடைக்க இச்செயலி கூடுதல் செயல்பாடுகளை கொண்டது.
மேலும்,சேமித்துவைக்கப்பட்ட தரவு தகவல்களை கொண்டு பாதிக்கப்பட்டவர்களும் அவரை சார்ந்தவர்களும் சிறிது நேரம் தங்கள் மொபைல் போனை அணைத்து வைக்கப்பட்டறிந்தாலும் , மற்றும் எல்லைக்குட்பட்டஅவர்களை பற்றிய தகவல்களை புவி இருப்பிடம் கொண்டு சுகாதாரத்துறையிடம் சென்றடைந்து விடவும் , நகர்வுகளை கணக்கிடவும் மிகதுல்லியமாக வரவரைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்த சாதனை நிகழ்த்துவதற்கு உறுதுணையாய் திகழ்ந்த அனைவரையும் எஸ். என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணஸ்வாமி , துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லூரியின் முதல்வர் முனைவர் என் ஆர் அலமேலு,ஆராய்ச்சி மையத்தின் தலைவர்கள் கணேஷ் மற்றும் திரு ராம்குமார் கணிப்பொறியியல் துறை தலைவர் முனைவர் கிரேஸ் செல்வராணி ஆகியோர் பாராட்டினார்கள்.