• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் மதுப்பானக் கடை பாரை அடித்து நொறுக்கிய மக்கள்

April 26, 2017 தண்டோரா குழு

திருப்பூர் முதலிபாளையம் அருகே மதுப்பானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் அக்கடையின் பாரை அடித்து நொறுக்கினர்.

திருப்பூர் அருகே உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதி பேருந்து நிலையத்தின் அருகில் மதுப்பானக் கடை செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகில் இக்கடை அமைந்துள்ளதால் மது அருந்த வருவோர் மது அருந்திவிட்டி சாலையில் நிற்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்வதாகவும், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் புகார்கள் எழுந்தன.

இந்தக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று அப்பகுதி மக்கள் மதுப்பானக் கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் திடீரென்று ஆவேசமடைந்து மதுப்பானக் கடையின் பாரை அடித்து நொறுக்கினர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பதற்றமான சூழல் நிலையை தவிர்க்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழகத்தில் மதுப்பானக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் இந்த சுழலில் இச்சம்பவம் திரூப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க