• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் – மாவட்ட ஆட்சியர்

May 5, 2020 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்திரவு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.டெல்லி,ஆந்திர,கர்நாடக மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளன.இதற்கிடையில்,
தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.எனினும் தமிழக அரசு மதுக்கடைக்கு வருபவர்கள் முகம்கவசம் அணிய வேண்டும், தனி மனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன்
அறிவித்துள்ளார்.மேலும்,டாஸ்மாக் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் கையுறை அணிய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க