• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

February 10, 2019

திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

திருப்பூரில் இன்று நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உற்சாக வரவேற்பு அளித்தார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மோடி திருப்பூர் சென்றார்.

திருப்பூரில் அமையவுள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் நரேந்திர மோடி, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நாட்டிற்கு அற்பணித்தார். அதை தொடர்ந்து, சென்னை, டி.எம்.எஸ்., – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்,

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க