• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

March 22, 2019 தண்டோரா குழு

திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ்(அதிமுக) 2014ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இத்தேர்தலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், சுயநினைவு இல்லாத போது ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்ட்டதாவும் இதனால் ஏ.கே.போஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இதற்கிடையில், ஏகே.போஸ் இறந்தால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனால், திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர்ந்த வலக்கை சரவணன் வாபஸ் பெற்றார். இந்நிலையில் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்துள்ளார்.

அதேசமயம், தன்னை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால், தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலுடன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க